ஒரு பக்கம் எதிரி; மறுபக்கம் நட்பு: டிரம்பின் இரட்டை வேடம் அம்பலம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட டெக்சாஸ் முதலீட்டாளர், ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் எரிவாயு நிறுவனமான, ‘நோவாடெக்’ உடன் ரகசிய ஒப்பந்தம் செய்தது தெரிய வந்து உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர், நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார்.

இந்நிலையில், டிரம்ப் மகனின் கல்லுாரி நண்பரும், மிகப் பெரிய முதலீட்டாளருமான ஜென்ட்ரி பீச் என்பவர், அதிபர் டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவராக அறியப்படுகிறார்.

இவர், கடந்தாண்டு இறுதியில் ரஷ்யாவின், ‘நோவாடெக்’ நிறுவனத்துடன் அலாஸ்காவில் எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு திட்ட ஒப்பந்தம் செய்துள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவின் அங்கரேஜ் நகரில் டிரம்ப் – புடின் சந்திப்பு நடைபெற்ற சில மாதங்களுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா – ரஷ்யா இடையே கடும் மோதல் இருப்பதாக காட்டிக்கொண்ட டிரம்ப், ஒருபக்கம் மறைமுகமாக நட்பு பாராட்டி, எரிவாயு ஒப்பந்தம் செய்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Source link