`கேக்குறாருல சொல்லுங்க ஜி… யாரு ஹீரோ?' – வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ!

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். 47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியும் கமலும் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தனர்.

ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK
ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

அப்படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த காம்போ இணைகிறது. இப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பலரின் பெயர் பேசப்பட்டது. இறுதியில் நெல்சனை லாக் செய்திருக்கிறார்கள்.

இந்த ப்ரோமோ 3.54 நிமிடங்கள் கால அளவில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். நெல்சனின் வழக்கமான புரோமோ ஸ்டைலில் இந்த முன்னோட்ட காணொளியும் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் கமலும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தயாராகும் வகையில் க்யூட்டான விஷயங்களையும் இந்த ப்ரோமோவில் சேர்த்திருக்கிறார்கள்.

ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK
ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

“ரெட்ரோ’ வடிவிலான ஃபாண்ட் வடிவம், கார்கள் இருப்பதனால் இப்படத்தின் கதையும் ப்ரீயட் கதையாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Source link