சென்னை: உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா பூரண குணம் அடைந்து வீடு

சென்னை: உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார்.

பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா(68) ஜன.30ம் தேதி உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர், அவர், சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஹெச். ராஜாவை முதல்வர் ஸ்டாலின் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந் நிலையில் 3 வாரங்கள் சிகிக்சைக்கு பின்னர், பூரண நலத்துடன் ஹெச். ராஜா வீடு திரும்பியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஹெச். ராஜா எக்ஸ் வலைதள பதிவில் அவர்கள் கூறியிருப்பதாவது;

அனைவரின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் சிகிச்சையும் இறைவனின் அனுக்ரஹத்தால் பலனளித்து ராஜா பூரண குணமடைந்து உடல்நலம் தேறி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நலமோடு வீடு திரும்பினார். நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link