புனே: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ராஷ்மிகா, அன்கிதா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி, ஜப்பானின் மிசாகி மட்சுடா, எரி ஷிமிசூ ஜோடியை சந்தித்தது.
‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றது.
ஒரு மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராஷ்மிகா, அன்கிதா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
