சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ‘கேம்பிங்’ தளங்கள் வடிவமைப்பு உட்பட, மூன்று சுற்றுலா திட்டங்களுக்கு, ‘டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது.

‘கேம்பிங்’ தளங்கள் வடிவமைப்பு திட்டத்தின் கீழ், ஜவ்வாது மலை, ஏலகிரி, வத்தல்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில், கேம்பிங் தளம் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் நகரங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களை பராமரிக்கவும் தகுதி வாய்ந்த நிறுவனங்களை தேர்வு செய்ய, ‘டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது.

மேலும், தேனி ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம், வேளாங்கண்ணி சர்ச் வீதி, பழைய நாகப்பட்டினம் கடற்கரை, கோடியம்பாளையம் கடற்கரை, கீழடி, மூக்கனேரி ஏரி, பூலாம்பட்டி கட்டடம், ஏடப்பாளையம் ஏரி, பிரான்மலை சுற்றுலா தலங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விபரங்களை, https://tntenders.gov.in// இணையதளம் வாயிலாக அறியலாம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

Source link