நீ ண்ட நெடியதொரு போராட்டத்தை சந்தித்து, இறுதியாக புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கிறது தேசிய பங்கு சந்தை. இந்த பங்குகளை கையில் வைத்திருப்போர் அவற்றை விற்பதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இதை கருதுவது ஒருபுறமிருக்க, இவற்றை வாங்கி தங்களுடைய முதலீட்டை வலுவாக்கி கொள்ள விரும்புவோர் மறுபுறமிருக்க, எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் அதிகரித்து வருகின்றன.
அடுத்த சில மாதங்களில் பங்கு வெளியீடு சம்பந்தமான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக, நிறுவனம் மற்றும் பங்கு வெளியீட்டுக் கான அதன் முயற்சிகள் குறித்த ஒரு அறிமுகப் பார்வை…
* புதிய பங்குகள் வெளியிடும் திட்டமில்லை
* முழுதும் ‘ஆபர் பார் சேல்’ மட்டுமே
* கிட்டதட்ட 5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை
*புதிய பங்குகள் வெளியிடப்படாததால், திரட்டப்படும் தொகை நிறுவனத்துக்கு சேராது
* பட்டியலிடப்படாத நிறுவன சந்தையில், தற்போது இதன் பங்கு விலை 2,000 ரூபாய்க்கும் மேல்
* பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், 3,000 ரூபாய் வரை உயர வாய்ப்பு.
