'நோட்‌ பண்ணுங்கப்பா' – மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

மீண்டும் தங்கம் விலையில் ஏற்றமா?

தங்கம்

ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது.

ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்களைப் பகிர்ந்து கொள்கிறது, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தரப்பு.

தங்கம்
தங்கம்

> சமீப நாள்களாக குறைந்த தங்கம் விலை இறங்குமுகத்திற்கானது அல்ல.‌ அது கரெக்ஷன்‌ ஆகி வந்தது. இப்போது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தங்கம் விலை கரெக்ஷன் ஆகிவிட்டது. அதனால், அது மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பலாம்.

> ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் சுமுகத் தீர்வை எட்டவில்லை. அதற்குள் அமெரிக்கா – இரான்‌ இடையே போர்‌ பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகரலாம்.

> அமெரிக்காவில் அடுத்த வாரம் வெளியாக‌ உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க அறிக்கை மிக முக்கியமானது.

காரணம், இதை வைத்தே, அடுத்து வட்டி விகிதம் குறைக்கலாமா… வேண்டாமா‌‌ என்று‌ முடிவு எடுக்க உள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி.

ஒருவேளை, வட்டி குறைக்கப்பட்டால், தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

தங்கம்
தங்கம்

இந்தச் சங்கம் கூறுவதைத் தாண்டி, அமெரிக்க அதிபர்‌‌ ட்ரம்பின்‌ வரிச் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து ட்ரம்ப் தற்போது உலகளவிலான வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இது உலக அளவில் மீண்டும் ஒரு பதற்றத்தை உண்டாக்கக் கூடும்.

இதனாலும், தங்கம் விலை அதிகரிக்கலாம்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதையும் கவனிங்க மக்களே.

Source link