சென்னை: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர்

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.

தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்., – ம.தி.மு.க., – வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இணைந்துள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையில், அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலர்கள் சிவா, ராஜா, அமைப்பு செயலர் பாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று (பிப்ரவரி 22) தொகுதி பங்கீடு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.

மதிமுகவுக்கு நாளை அழைப்பு

மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு நாளை (பிப்ரவரி 23) பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் பிப்ரவரி 26ம் தேதி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது.

Source link