சிவகங்கை: மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் நாட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என

சிவகங்கை: மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் நாட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

கேள்வி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு இடையே இணக்கம் இல்லை என்று சொல்கிறார்களே, நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்.

சி.பி.ஆர்: நயினார் நாகேந்திரன் பக்கத்தில் இருக்கிறார் நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அதனால் தான், உங்களை பார்த்தவுடன் நான் கும்பிட்டு விட்டு செல்கிறேன். துணை ஜனாதிபதி அரசியல் கேள்விகளுக்கு பதில் சொன்னால் சரியாக இருக்காது.

மத்திய – மாநில அரசுகள் எப்பொழுதும் இணைந்து செயல்படுவதுதான் ஒரு பகுதியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 18 சதவீதம் இறக்குமதி வரி விதித்து இருக்கிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். இந்தியாவுக்கு இது கூடுதல் அழுத்தமாக இருக்குமா?

சி.பி.ஆர்: நீங்கள் தவறாக புரிந்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் 50 சதவீதம் வரி போட்டு இருந்தார். இப்பொழுது 18 சதவீதமாக மாற்றி இருக்கிறார். நிச்சயமாக இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

வழிபாடு

முன்னதாக, திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இந்த புகை ப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மக்கள் அனைவரின் அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மரியாதை

சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ”வேலு நாச்சியாரின் துணிச்சலும் தியாகமும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் அவரது அர்ப்பணிப்பு நாட்டை வழிநடத்தும்” என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வரவேற்பு

முன்னதாக, சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை கலெக்டர் பொற்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Source link