முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

முன்னாள் மனைவிக்கு பரிசளித்த ஹர்திக்

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

ஹர்திக் பாண்டியா – நடாஷா
ஹர்திக் பாண்டியா – நடாஷா

கணவன், மனைவியாக இருவரும் பிரிந்தாலும், ஒரு பெற்றோராக தங்களது மகன் அகஸ்தியா வளர்ப்பிலும், நலனிலும் எந்த குறையும் இல்லாமல் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும், தனது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Source link