வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்து 14 பேர் காயம்

புதுடில்லி: வீட்டில் பற்றிய தீயை அணைத்துக் கொண்டிருக்கும் போது, காஸ் சிலிண்டர் வெடித்து மூன்று தீயணைப்பு வீரர்கள், மூன்று போலீஸ்காரர் உட்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

வடமேற்கு டில்லியின் மஜ்லிஸ் பூங்கா அருகே ஒரு வீட்டில் நேற்று காலை 9:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, வஜிர்பூரில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் ஆதர்ஷ் நகரில் இருந்து போலீசார் வந்தனர்.

தீயை அணைத்துக் கொண்டிருந்த போது வீட்டின் சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

மூன்று தீயணைப்பு வீரர்கள், மூன்று போலீஸ்காரர்கள் உட்பட 14 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில், ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

Source link