பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில், ‘ஆரோக்கியம் ஆனந்தம்’ எனும் வாழ்முறை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
அரசின் ஆயுஷ் துறையும், தேசிய ஆயுஷ் மிஷனும் இணைந்து நடத்தும் இந்த முகாமை எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.மருதரோடு அரசு ஹோமியோபதி மருந்தகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சுனிதாகுமாரி பேசினார்.
மலம்புழா வட்டார ஊராட்சித்தலைவர் கிருஷ்ணன்குட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் கண்காட்சி, யோகா பயிற்சி மற்றும் ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றன.
ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, சரியான துாக்கம் மற்றும் முறையான ஆரோக்கியப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நல்வாழ்வு முறையைப் பின்பற்ற, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊக்கமளிப்பதே இந்த முகாமின் நோக்கமாகும்.
வட்டார ஊராட்சி துணைத்தலைவர் ராதிகா மாதவன், மலம்புழா, மருதரோடு, புதுப்பரியாரம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சஜித், சவுமியா வினீஷ், விஜயன், மலம்புழா ஊராட்சி சுகாதார நிலையக்குழுத் தலைவர் சஜிதா, அகத்தேத்தற அரசு ஹோமியோபதி மருந்தக மருத்துவ அதிகாரி வினயகுமார், மலம்புழா அரசு ஆயுர்வேத மருந்தக மருத்துவ அதிகாரி பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
