கோவை: ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ‘தாமஸ் குக்’ டிராவல் ஏஜன்ஸி சார்பில், ‘கிராண்ட் டிராவல் மேளா’ கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜன்ட் ஹோட்டலில் நேற்று நடந்தது.
சர்வதேச மற்றும் உள்நாட்டில் சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்கள், சிறப்பு சலுகையில், சுற்றுலா செல்ல இந்த மேளா நடத்தப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய மேளாவுக்கு ‘தினமலர்’ நாளிதழ் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்தனர். ஒரு நாள் மட்டுமே சலுகை என்பதால், பலரும் தங்களது சுற்றுலாவுக்கான முன்பதிவை மேற்கொண்டனர். பயணத் தேதியை மாற்ற, ரத்து செய்ய கட்டணம் இல்லை, கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், பெல்ஜியம், ஆஸ்திரியா, லீச்சென்ஸ்டீன் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுலா சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. எட்டு முதல், 15 நாட்கள் வரையிலான திட்டங்கள், ரூ.2.77 லட்சம் முதல் ரூ.4.61 லட்சம் வரையிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
குயிக் ஹாலிடேஸ் பிரிவில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, சீனா என, தேர்வு செய்யும் நாடு மற்றும் நாட்களை பொறுத்து, ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சிங்கப்பூர் சுற்றுலா முன்பதிவுக்கு, சொகுசு கப்பல் பயணம் இலவசம், ஒரு நாள் தங்குமிடம் இலவசம் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டன. அனுபவமிக்க சுற்றுலா, ஆன்மிக பயணங்கள், இந்தியா மற்றும் அதை சுற்றிலும் ஆகிய திட்டங்கள், ரூ.30 ஆயிரம் முதல், ரூ.3.97 லட்சம் வரையிலான கட்டணத்தில் வழங்கப்பட்டன.
உள்நாட்டு சுற்றுலாவில் ஹிமாச்சல், நேபாளம், கைலாஷ், கேரளா, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட இடங் களுக்கு செல்ல முன்பதிவு நடந்தது. இப்பிரிவில் முன்பதிவு செய்தவருடன் ஒரு நபர் இலவசமாக பயணிக்கும் சலுகையும் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்தோரில் பம்பர் குலுக்கல் முறையில் தேர்வான ஜோடிக்கு மூன்று நாள் கோவா பயணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டு வாயிலாக கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. ‘தினமலர்’ நாளிதழ் வாசகர்களுக்கு ரூ.30 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. அமெரிக்க டூரிஸ்டர் பேக் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தாமஸ் குக் டிராவல் ஏஜன்ஸி கோவை கிளை மேலாளர், உத்ரா மதன் முன்பதிவு செய்தவர்களுக்கு பயண அனுமதி அட்டையை வழங்கினார். மாலை 6:00 மணி வரை நடந்த மேளாவில், 204 பேர் பங்கேற்றனர்.

