நமது நிருபர்ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த

நமது நிருபர்

ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் ராஜாஜி சிலை அமைக்கப்பட உள்ளது.

1947ல் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் ஜனாதிபதி மாளிகையில் இருந்தன. தற்போது இது மாற்றப்பட்டு, இந்திய தலைவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலனித்துவத்தை முற்றிலுமாக அழிக்கும் வகையில், அதன் அடையாளங்களை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஜனாதிபதி மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) உள்ள பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் சிலை அகற்றப்பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த ராஜாஜி சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

காலனித்துவ ஆதிக்கத்தின் அடையாளங்களை மாற்றி, இந்திய கலாசார அடையாளங்களைப் போற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகும், ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டிஷாரின் சிலைகளே நிறுவப்பட்டன.

அந்த மரபை உடைத் தெறியும் வகையில், நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் உருவச்சிலை திறக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Source link