நமது நிருபர்கேசிவேணுகோபால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்; அவர் பிறக்கும் போதே நான் காங்கிரஸ் கட்சியில்

நமது நிருபர்

கேசிவேணுகோபால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்; அவர் பிறக்கும் போதே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருக்கிறேன் என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.

உங்களுடைய கருத்தை காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது வேணுகோபால் உள்ளிட்டோர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய பதில் வருமாறு :கேசிவேணுகோபால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்; அவர் பிறக்கும் போதே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருக்கிறேன். அவர் யார் என்னை பற்றி இப்படி சொல்வதற்கு? அவர் ராஜியோட இருந்தாரா?

நான் ஐஎப்எஸ். ஆனாலும் நான் ராஜினாமா செய்து, ராஜிவ் உடன் பணியாற்றி, நான் அரசியலுக்கு அவருக்காக தான் வந்தேன். அவர் தவறி போனதற்கு ஒரே காரணம், நான். என்னை ஆதரிப்பதற்காக அவர் ஸ்ரீபெரும்புதூர் வர நேரத்தில் நான் மயிலாடுதுறையில் அவருக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

கை விட்டுவிட்டார்கள்

அவர் வரவே இல்லை. அவர் இங்கே பழிக் கொலை நடந்து அவரால் வர முடியவில்லை. இப்பொழுது கே.சி.வேணுகோபால் யார்? அவரை ராகுல் பொதுச்செயலாளராக போட்டு இருக்கிறார். ராஜிவ் போட்டு இருப்பாரா? எதற்காக என்னை பிடித்து இப்படி அவமானம் செய்றது, எனக்கு 85 வயது. என்னை கண்டு எதற்காக அவங்களுக்கு இவ்வளவு பயம். என்னை பற்றி எதற்காக அவர்கள் இவ்வளவு பேசுகிறார்கள். என்னை கை விட்டுவிட்டார்கள். நான் எங்கேயும் இல்லை. யாரும் இல்லை.

வீணாய் திட்டினார்

இன்னைய தேதியில் என்னை நீங்கள் இங்கே கூப்பிட்டு இருக்கும் காரணம், வேணுகோபால் தானே, இல்லையென்றால் இன்னைக்கு என்னை கூப்பிட்டு இருப்பீர்களா. எதற்காக கடைசி நிமிடத்தில் என்னை கூப்பிட்டீர்கள். ஏனென்றால் வேணுகோபால் என்னை வீணாய் திட்டினார். அப்படி இருக்கும் சூழலில் ஏதோ எனக்கும் முக்கியத்துவம் உண்டு என்பது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. இல்லையென்றால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன். நல்லவேளை இந்த வேணுகோபால் காரணமாக நான் மீண்டும் இங்கே உருவாகி வந்து இருக்கிறேன், நன்றி. இவ்வாறு மணிசங்கர் ஐயர் பேசினார்.

Source link