திருநெல்வேலி: ''2026 ல் ஒரு பலமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள்,'' என, திருநெல்வேலியில் பா.ஜ., மாநில

திருநெல்வேலி: ”2026 ல் ஒரு பலமான மாற்றத்தை தமிழக மக்கள் பார்ப்பார்கள்,” என, திருநெல்வேலியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது பிரதான வேண்டுதல். அதற்காகவே ஆன்மீகப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

தி.மு.க., கூட்டணி தொகுதிப்பங்கீடுகளை முடித்து வருவதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே கூட்டணியில் இருப்பவர்கள். புதிதாக யாரும் சேரவில்லை. எனவே அதை மின்னல் வேகம் என்று சொல்ல முடியாது. வரும் தேர்தலில் மக்கள் தான் உண்மையான முடிவை எடுப்பார்கள்.அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகள் உள்ளன.

நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லியுள்ளது. ஆனால் தி.மு.க., அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தென்காசியில் பேசிய ஒரு முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை. ஆனால் பா.ஜ.,வினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட உடனுக்குடன் கைது செய்கிறார்கள்.

விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் அறிவிப்போம். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர் என்றார்.

Source link