சண்டிகர்: பஞ்சாபில், பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 6ம் தேதி துவங்குகிறது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி

சண்டிகர்: பஞ்சாபில், பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 6ம் தேதி துவங்குகிறது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் மாதம் 6ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகிறது. மார்ச் 16ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சர்வதேச பெண்கள் தினமான, மார்ச் 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மறுநாள், கவர்னர் உரை மீது விவாதம் நடத்தப்படும்.

அதேபோல, 12,800 கோடி ரூபாய் வருவாய் திரட்டும் வகையில், புதிய மதுபானக் கொள்கை 2026 – 20-27க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 10 மற்றும் -11 ஆகிய தேதிகளில் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link