உ.பி., – சிங்கப்பூர் இடையே ரூ.6,650 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர் சிங்கப்பூர் பயணத்தின் முதல் நாளிலேயே உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், 6,650 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத்தாகின.

உத்தர பிரதசேத்தில் வீட்டு வசதி, சரக்கு போக்குவரத்து பூங்கா, பெரிய அளவிலான தரவு மையம் ஆகிய திட்டங்களுக்கான இந்த ஒப்பந்தங்கள், சிங்கப்பூரின் யுனிவர்சல் சக்சஸ் குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டங்கள், மாநிலத்தில் 20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

Source link