புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, ஏழு லோக்சபா தொகுதிகளிலும் ஒரு வாரத்துக்கு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, டில்லி மாநில பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு, ஏழு லோக்சபா தொகுதிகளிலும் ஏழு நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தி, அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கப்படும்.
முதல்வர் ரேகா குப்தா மற்றும் டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் இந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்பர். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடலும் நடத்தப்படும்.
மேற்கு டில்லியில் இன்றும், கிழக்கு டில்லியில் நாளையும் பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நடக்கிறது.
புதுடில்லி தொகுதியில், 26ம் தேதி, வடமேற்கு டில்லி – 27, தெற்கு டில்லி – 28 தேதிகளில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
மார்ச் 1ம் தேதி சாந்தினி சவுக் தொகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையால் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் அரசின் சாதனையை விளக்குவது மட்டுமின்றி, டில்லி மாநகரில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
