சென்னை: ''பசும்பொன்னில் இன்று நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முக்கிய முடிவை அறிவிக்க

சென்னை: ”பசும்பொன்னில் இன்று நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்,” என, சசிகலா தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், சசிகலா சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க, சசிகலா நேற்று பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன், அவர் அளித்த பேட்டி:

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியை பின் தொடர்கிறேன். பசும்பொன்னில், இன்று ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், சில முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link