முதலீட்டாளர்கள் சேர்க்கை வேகம் குறைந்தது

அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் காரணமாக புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் சேரும் வேகம் குறைந்துள்ளது தேசிய பங்கு சந்தையின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனவரி மாதத்தில் 17.70 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். எனவே, மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12.70 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, 2025 செப்டம்பரில் மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது. கிட்டதட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Image 1540186

Source link