50 கம்பெனி துணை ராணுவம்; மார்ச் 10ல் தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தலின்போது பாதுகாப்புப் பணிக்கு, துணை ராணுவம் வரவழைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, முதல் கட்டமாக, தமிழகத்திற்கு 50 கம்பெனி துணை ராணுவத்தை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அவர்கள் மார்ச் 10 முதல் தமிழகம் வர துவங்குவர். ஒரு கம்பெனியில், 100 முதல் 120 வீரர்கள் இருப்பர்.

Source link