ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கினால் அதிக வரி விதிப்பேன்: டிரம்ப் அச்சுறுத்தல்

வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து எந்த நாடும் பின்வாங்க கூடாது; பின் வாங்கினால் கூடுதல் வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அதீத வரிகளை விதித்தார். இவ்வரி விதிப்புக்கு, உலக நாடுகள் மட்டுமின்றி உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு சர்வதேச நாடுகள் மீதான வரி விதிப்பை 10 சதவீதம் என்று நிர்ணயித்த டிரம்ப், பிறகு அதை 15 சதவீதமாக உயர்த்தினார். தற்போது புதிய வரி அச்சுறுத்தலை டிரம்ப் விடுத்து இருக்கிறார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் அபத்தமான தீர்ப்பை விளையாட விரும்பும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் சமீபத்தில் பேச்சு நடத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்க கூடாது. மீறினால் சமீபத்தில் ஒப்புக்கொண்டதை விட மிக அதிக வரியை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link