லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் தீ பற்றியதில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உடல் கருகி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் தீ பற்றியதில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் வீடு ஒன்றில் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ பற்றிய போது வீட்டிற்குள் சிக்கிய இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்கள். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஐந்து குழந்தைகளும் ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தீ பற்றியதற்கான காரணம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ பற்றிய வீட்டிற்குள் செல்ல முடியாத வகையில், குறுகிய பாதைகள் இருத்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link