மாஸ்கோ: ரஷ்யாவில் போலீசார் ரோந்து வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் போலீஸ் அதிகாரி

மாஸ்கோ: ரஷ்யாவில் போலீசார் ரோந்து வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

வடக்கு மாஸ்கோவில் கவியோ லோவ்ஸ்கி ரயில் நிலையம் உள்ளது. ரஷ்யாவின் முக்கிய ரயில் நிலையமான இங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரோந்து வாகனம் ஒன்றில் போக்குவரத்து போலீசார் அமர்ந்து இருந்தனர்.

அவர்களை அணுகிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பின்னர் தாம் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட, உடனிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தை அடுத்து ரஷ்ய புலனாய்வு குழு விசாரணையில் இறங்கி உள்ளது. தாக்குதல் நடத்தியவர் யார், அவர் பயங்கரவாதியா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரஷ்யா- உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 4 ஆண்டுகள் முடிந்து, இன்று முதல் 5வது ஆண்டாக தொடரும் நிலையில் இந்த தாக்குதல் அரங்கேறி இருக்கிறது.

Source link