`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' – JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறிவிப்பு

மேலும் இந்தத் தேர்வில் நல்ல ரேங்க் பெறுபவர்கள் JEE advance தேர்வு எழுதத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வு மூலம் இந்தியாவில் உள்ள IIT-களில் சேரமுடியும்.

 JEE main

JEE main 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜனவரியில் நடந்த முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வையும் எழுதலாம். புதிய தேர்வர்களும் எழுதலாம். முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது, இரண்டு தேர்வுகளில் எதில் அதிக ரேங்க் பெற்றுள்ளார்களோ அதையே இறுதி ரேங்காக, தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எடுத்துக்கொள்ளும்.

மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை

JEE main தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 31 என்ஐடி-க்கள் (NITs), 25 ஐஐஐடி-க்கள் (IIITs), 40 அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) மற்றும் பல மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின்  அறிவிப்பு

மேலும் இந்தத் தேர்வில் நல்ல ரேங்க் பெறுபவர்கள் JEE advance தேர்வு எழுதத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வு மூலம் இந்தியாவில் உள்ள IIT-களில் சேரமுடியும்.

JEE main தேர்வை தற்போது பிளஸ்டூ படித்துவரும் மாணவர்கள் எழுதலாம். 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவுறும் தருவாயில் இருக்கிறது. தற்போது இந்தத் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பருவம் 1 மற்றும் பருவம் 2 இரண்டு தேர்விலும் செய்துள்ள விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ விடுபடல்கள் இருந்தாலோ திருத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 27.02.2026 முதல் 28.02.2026 இரவு 11.50 வரை திருத்தங்களுக்கான விண்டோ திறக்கப்பட்டிருக்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு போட்டு திருத்தத்தைச் செய்யலாம்.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பருவம் 1 தேர்வில் சிலர் ஒதுக்கீட்டுக்கான சாதிச்சான்றிதழ்களை இணைக்காமல் விட்டிருப்பார்கள். அவர்கள், கேட்டகிரியை மாற்றி தங்கள் சாதிச் சான்றிதழை இணைக்க முடியும்.

`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின்  அறிவிப்பு

தேர்வுக்கான பேப்பர்கள், தேர்வுக்கான மொழி, தேர்வு மையம் உள்ளிட்டவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.

சில மாற்றங்களுக்கு மட்டும் விதிமுறைப்படி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மிகுந்த சிரமப்பட்டு படித்து தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பத்தில் செய்யும் சிறு தவறால் பெரிய வாய்ப்புகளை இழக்கக்கூடும். அதனால் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

கூடுதல் விவரங்களுக்கு நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://jeemain.nta.nic.in -ஐ தொடர்பு பார்க்கலாம்.

Source link