கோலாலம்பூர்: பிரதமர் பதவிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு விதிக்கும் புதிய அரசியல் சாசனத்

கோலாலம்பூர்: பிரதமர் பதவிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு விதிக்கும் புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவை மலேசியா அரசு தாக்கல் செய்துள்ளது.

புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

ஒருவர் தனது வாழ்நாளில் மொத்தம் 10 ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருக்க முடியும்.

இது தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் அவர் 2032-ம் ஆண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது.

10 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை தானாகவே கலைக்கப்படும். புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிக அரசாங்கமாக செயல்படுவார்கள்.

அதிகாரம் ஓரிடத்தில் குவிவதைத் தடுக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இந்த மலேசிய அரசின் ‘மடானி’ சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக மாற பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் (148 எம்பிக்கள்) ஆதரவு தேவை. மார்ச் 3, அன்று இந்த மசோதா மீதான இரண்டாம் கட்ட விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேறினால், மலேசிய அரசியலில் மகாதிர் முகமது போன்ற தலைவர்கள் நீண்ட காலம் (24 ஆண்டுகள்) ஆட்சி செய்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link