சுற்றுலா என்பது கலாசாரங்களை இணைக்கும் பாலம்; துணை ஜனாதிபதி சிபிஆர் பேச்சு

புதுடில்லி: ”சுற்றுலா என்பது கலாசாரங்களை இணைக்கும் பாலமாகவும், மென்மையான ராஜதந்திரத்தின் வலிமையான கருவியாகவும் செயல்படுகிறது,” என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் இன்று (பிப்ரவரி 24) சுற்றுலாத் தலைமைத்துவ உச்சி மாநாடு நடைபெற்றது.

அதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

சுற்றுலா என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; அது கலாசாரங்களை இணைக்கும் பாலமாகவும், மென்மையான ராஜதந்திரத்தின் வலிமையான கருவியாகவும் செயல்படுகிறது.

இந்திய வம்சாவளியினரின் தொழில்முனைவு ஆற்றல் பெரும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

சுற்றுலாத் துறையில் நிலையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த வரைபடத்தை உருவாக்க இந்த மாநாடு உதவும்.

சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.

Source link