ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை ஏமாற்றம்

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 0-2 என, மோகன் பகான் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், சென்னை அணிகள் மோதின. ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+4வது நிமிடம்) ஜேமி மெக்லாரன் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணிக்கு 65வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடோஸ் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே மும்பையிடம் ஏமாற்றிய சென்னை அணி, தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது.

Source link