சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு முடிவை ஒத்திவைத்தது டாடா

மும்பை: டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை அங்கீகரிக்கும் முடிவை அக்குழுமம் ஒத்திவைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு சந்திரசேகரனின் பதவியை மூன்றாவது முறையாக டாடா சன்ஸ் நீட்டித்த நிலையில், 2027 பிப்ரவரி வரை அவர் பதவியில் தொடர்வார். அதற்கு பிறகும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அக்குழுமத்தின் இயக்குநர் வாரிய கூட்டத்தில், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா, சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த சூழலில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் சில புதிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவது குறித்து இயக்குநர் குழு கவலை தெரிவித்துள்ளது. எனினும் நோயல் டாடா தவிர, இதர இயக்குநர்கள் சந்திரசேகரன் பதவியில் தொடர ஆதரவாக உள்ளனர். புதிய நிறுவனங்கள் துவங்கப்படும்போது ஆரம்ப கட்டத்தில் நிதி நெருக்கடிகள் வருவது இயல்பு என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒருமித்த கருத்தை எட்டும்வரை தனது பதவி நீட்டிப்பு குறித்த முடிவை ஒத்திவைக்கும்படி சந்திரசேகரன் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், டாடா சன்ஸ் ஒருபோதும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாது என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை அவர் வழங்க வேண்டும் என்றும் நோயல் டாடா கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link