சென்னை: அதானி நிறுவனத்திடம் இருந்து, யூனிட், 5.91 ரூபாய் விலையில், ஐந்து ஆண்டுகளுக்கு 558 மெகா வாட் மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த, ‘மாக்சி’க்கு தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல்மின் நிலையம் உள்ளது.
இந்த மின் நிலையத்தில் இருந்து, 558 மெகா வாட் மின்சாரத்தை, வரும் ஏப்., 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்க, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை, 5.91 ரூபாய்.
