ரூ.5,000 கோடி திரட்டும் கனரா வங்கி

பொ துத்துறையை சேர்ந்த கனரா வங்கி, தனது மூலதனத்தை பலப்படுத்தவும், வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும் ‘டயர்-2 பத்திரங்கள்’ வாயிலாக 5,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

நாளை முதல் தேசிய பங்குச்சந்தையின் மின்னணு ஏல தளத்தின் வாயிலாக இந்த பத்திர வெளியீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2,000 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்தால், கூடுதலாக 3,000 கோடி ரூபாய் வரை திரட்டவும்

திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த பத்திரங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்ற தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Source link