பாகிஸ்தான், வங்கதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை, டில்லி காவல் துறையினர் திருப்பூரில் கைது செய்துள்ளனர். திருப்பூரில் கைதான ஆறு பயங்கரவாதிகளும், இந்தியாவின் பல நகரங்களில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக செயல்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது.
திருப்பூரில் இருந்தபடியே, முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் முன்னேற்பாடுகளில் ஈடுபட்ட அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கத் தவறியது, தி.மு.க., அரசின் தோல்வி.
கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் எந்த நேரமும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற ஆபத்து நீடிக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், தமிழக காவல் துறை, பல மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்தது, இதில் இருந்து உறுதியாகிறது. தமிழகத்தை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியதற்காக, மக்களிடம் தி.மு.க., அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
— அன்புமணி, தலைவர், பா.ம.க.,
