நமது நிருபர்"போர் 5வது ஆண்டில் நுழையும் நேரத்தில், ​​உக்ரைனுக்கான ஆதரவை இரட்டிப்பாக்குகிறோம்" என பிரிட்டன்

நமது நிருபர்

‘போர் 5வது ஆண்டில் நுழையும் நேரத்தில், ​​உக்ரைனுக்கான ஆதரவை இரட்டிப்பாக்குகிறோம்’ என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது: உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போர் நமது சகாப்தத்தின் மிக முக்கியமான பிரச்னை. உக்ரைன் மக்களுக்கு ஒன்றை சொல்கிறேன். பிரிட்டன் உங்களுடன் உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையானது. அதனால் தான் இன்று நாங்கள் புதிய ஆதரவை அறிவிக்கிறோம். மேலும் உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

போர் 5வது ஆண்டில் நுழையும் நேரத்தில், ​​உக்ரைனுக்கான ஆதரவை இரட்டிப்பாக்குகிறோம். நிலையான அமைதி வரும் வரை நாங்கள் அவர்களுக்குப் பக்கபலமாக நிற்போம். தற்போது நடந்து வரும் ரஷ்யா வெற்றி பெறவில்லை. அவர்கள் இந்தப் போரில் வெற்றி பெற மாட்டார்கள். புடினின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு, உக்ரைனின் தைரியமாக செயல்படுகிறது. இவ்வாறு கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

Source link