`'நான் மட்டும் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்' என்றனர்' – மீண்டும் ட்ரம்ப்

“உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம்”- ட்ரம்ப்

ட்ரம்ப்

இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதப்போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம்.

இந்திய பிரதமர் - பாகிஸ்தான் பிரதமர்
இந்திய பிரதமர் – பாகிஸ்தான் பிரதமர்

எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் என்னிடம் சொன்னார்கள்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன்.

ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.

ரஷியா – உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது” என்று கூறியிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

Source link