-நமது நிருபர்-பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சம்மதம்

-நமது நிருபர்-பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். பாஜ தலைமையும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் காலியாகும் 37 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் மார்ச் 16ல் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,விற்கு 4 எம்.பி, பதவிகளும், அ.தி.மு.க., 2 எம்.பி., பதவிகளும் கிடைக்கும். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்தபோது, 17 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அ.திமு.க., – பாஜ., கூட்டணியில் உள்ள த.மா.கா., தலைவர் வாசன், பிரதமா் மோடியுடன் நட்பில் இருப்பவர். அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரைக்கும், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பா.ஜ.,வும், அன்புமணிக்கு எம்.பி., பதவி வழங்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link