நல்லகண்ணு மறைவு: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!"- ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்லி செலுத்தியிருக்கிறார்.

ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவரது உடல் தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்லி செலுத்தியிருக்கிறார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு. க ஸ்டாலின், ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு நல்லகண்ணு மறைவு வருத்தமான செய்தி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக விளங்கியவர் நல்லகண்ணு. அவரை இழந்து வாடக்கூடிய குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழருக்கும் எனது இரங்கல்களை திமுக சார்பாக தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link