இஷான் கிஷான் 'நம்பர்-5': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் இஷான் கிஷான் 5வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் இஷான் கிஷான், 742 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து ‘நம்பர்-5’ இடத்தை கைப்பற்றியது. ‘டி-20’ உலக கோப்பையில் இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 அரைசதம் உட்பட 176 ரன் எடுத்துள்ளார்.

மற்றொரு இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 877 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கேப்டன் சூர்யகுமார் (740 புள்ளி) 6வது இடத்தில் நீடிக்கிறார்.

பவுலர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (790 புள்ளி) ‘நம்பர்-1’ இடத்தில் தொடர்கிறார். ‘டி-20’ உலக கோப்பையில் ‘சுழலில்’ அசத்தி வரும் வருண், 5 போட்டியில், 10 விக்கெட் சாய்த்துள்ளார்.

‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (272) 3வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ஷிவம் துபே, 216 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்தை தட்டிச் சென்றார்.

Source link