'ஆப்பிள், மைக்ரோசாப்ட்' பங்குகளை இனி சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம்

இ ந்திய சிறு முதலீட்டாளர்கள், அமெரிக்காவின் ‘ஆப்பிள், மைக்ரோசாப்ட்’ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளை நேரடியாகவும், மிக எளிதாகவும் வாங்கும் வசதியை, ‘என்.எஸ்.இ., இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச்’ அறிமுகப்படுத்தியுள்ளது. ‘குளோபல் அக்சஸ்’ என்ற தளம் வாயிலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘என்.எஸ்.இ., இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வி.பாலசுப்ரமணியம் கூறியதாவது:

“தற்போது அமெரிக்க சந்தையில் முதலீடு செய்யும் வசதி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 முதல் 6 மாதங்களில், உலகெங்கிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில் இந்தியர்கள் முதலீடு செய்ய வழிவகை செய்யப்படும்.

இது இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.

தற்போது தனிநபர் முதலீட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த வசதி, அடுத்த கட்டமாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என்றார்.

Source link