Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு… இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

நாய் அல்லது பூனை கடித்த காயம் மிகவும் ஆழமாக (deep bite) இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்தப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும்.

வளர்ப்பு நாய் நக்கியதால் மாரடைப்பு வருமா?

Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன்.

மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா… வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை
தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

கேப்னோசைட்டோபேகா என்பது ஒரு சாதாரண பாக்டீரியா வகை. இது பலருடைய உமிழ்நீரில் (saliva) காணப்படக்கூடியது. இதில் Capnocytophaga canimorsus என்ற வகை பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்கும். பொதுவாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த பாக்டீரியா அதிக அளவில் ரத்தத்தில் கலந்தால் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ளது.

வீட்டில் வளர்க்கும் மிருகங்களாக இருந்தாலும், அவை கடித்த காயம் பெரியதாக இருக்கும்போது, வழக்கமான சிகிச்சையுடன் குறிப்பிட்ட இந்தக் கிருமிக்கான சிறப்பு மருத்துவ கவனிப்பும் (atypical coverage) தேவைப்படும். 

இது போன்ற சூழல்களில் கேப்னோசைட்டோபேகா மட்டுமன்றி Bartonella, Pasteurella போன்ற இதர பாக்டீரியாக்களும் தொற்றை உண்டாக்கலாம்.
வளர்ப்புப் பிராணிகள் வெறுமனே நக்குவதால் மட்டும் இது பரவாது. மாறாக, நம் உடலின் சவ்வுப் படலம் (mucosal surface) உள்ள பகுதிகளில் நக்கினாலோ அல்லது வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ மட்டுமே இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 

நாய் அல்லது பூனை கடித்த காயம் மிகவும் ஆழமாக (deep bite) இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்தப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும். 

குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும்.
குறிப்பாக, பூனை கடிக்கும்போது (Cat bite) இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும்.
freepik

காயமும் ஆழமாக இருந்து, ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் நிலையில், மேற்கூறிய காரணங்களால் தொற்று ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை (major infection) உண்டாக்கக்கூடும்.

பெரும்பாலான நேரங்களில் இது தானாகவே சரியாகிவிடும். இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்ற கிருமிகள் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதும், இந்தப் பெண்ணுக்கு நடந்த விஷயமும் அரிதினும் அரிதான நிகழ்வு என்பதால் இதற்காகப் பயப்படத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Source link