புதுடில்லி: 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர்

புதுடில்லி: ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை, பிரதமர் மோடி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது.

‘வீடியோ’ மற்றும் புகைப்படங்களை பகிரும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், 2014ல் பிரதமர் மோடி இணைந்தார்.

பயணங்கள், உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு விழாக்கள், வாழ்த்துகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பகிர, இந்த தளத்தை பிரதமர் பயன்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் தற்போது, 10 கோடிக்கும் அதிமானோர் பிரதமர் மோடியை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இது, அமெரிக்க அதிபர் டிரம்பை பின்தொடர்வோரின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். இதன்மூலம், டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.

இரண்டாமிடம் பிடித்துள்ள டிரம்பை, 4.30 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதேபோல் இந்தோனேஷிய அதிபர் சுபியாண்டோவை, 1.50 கோடி பேரும், பிரேசில் அதிபர் லுாலாவை, 1.40 கோடி பேரும், துருக்கி அதிபர் எர்டோகனை, 1.10 கோடி பேரும் பின் தொடர்கின்றனர்.

இதேபோல், இந்திய அளவில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, 1.60 கோடி பேர் பின்தொடர்கின்றனர். காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, 1.20 கோடி பயனர்கள் பின்தொடர்கின்றனர்.

Source link