இஸ்ரேல் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

புதுடில்லி: 2 நாள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, இஸ்ரேல் பார்லியில் சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றிய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஏஐ, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இஸ்ரேலில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

Source link