IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்

“கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன்.” Hardik Pandya

Hardik Pandya

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா.

பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன்.

Hardik Pandya
Hardik Pandya

நான் அதிகமாக பலத்துடன் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கில், பந்தை சரியான நேரத்தில் அடித்து சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில், இது ஒரு நல்ல போட்டி. ஏனெனில் என் ரிதத்தை தொடர்ந்து வைத்திருக்க இது உதவியது. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன்.” என்றார்

முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை பார்த்தீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், அந்த போட்டியை நாங்கள் எல்லோரும் கவனித்துக்கொண்டே இருந்தோம். இப்போது முக்கியமானது நல்ல கிரிக்கெட் விளையாடுவது. நிச்சயமாக அந்த போட்டியை கவனித்தோம். ஆனால் அதே நேரத்தில், எங்கள் போட்டி முடிந்தவுடன், இது எங்களுடைய ஆட்டம் என்று முழுக் கவனமும் போட்டியில் செலுத்தினோம்.” என்றார்

Hardik Pandya
Hardik Pandya
Ajit Solanki

அவரின் பந்துவீச்சு குறித்து கூறுகையில், ‘புதிய பந்துடன் பந்துவீசுவது எனக்கு பிடிக்கும். பந்து ஸ்விங் ஆகிறது. கடவுள் அருள் செய்துள்ளார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் – இரண்டையும் வீசும் திறன் எனக்கு உள்ளது. அதனால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். இதனால் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருக்கிறது. ஆகவே, மிகவும் திருப்தி” என்றார்.

Source link