புதுடில்லி: மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு போட்டியிடும் 4 பேரின் பெயர்களை திரிணமுல் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான ரிதாப்ரதா பானர்ஜி, சாகேட் கோகாலே, சுப்ரதா பக்ஷி, மவுசம் பெனாசிர் நூர், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா உள்பட நாடு முழுவதும் காலியாகும் 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் மார்ச் 16ல் தேர்தல் நடக்க உள்ளது.மேற்கு வங்கத்தில் ஐந்து எம்பிக்கள் காலியாகும் நிலையில், சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திரிணமுல் காங்கிரசால் 4 எம்பி பதவிகளை எளிதாக கைப்பற்ற முடியும். பாஜ ஒரு எம்பி பதவியை பெற முடியும்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ் குமார், வழக்கறிஞர் மேனகா குருசாமி, நடிகர் கோயல் மாலிக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளது.
