புதுடில்லி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நீதிபதிகளை, காலியிடம் ஏற்படுவதற்கு இரண்டு

புதுடில்லி: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நீதிபதிகளை, காலியிடம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கொள்கை முடிவு எடுத்துள்ளது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இணையதளம்

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இதில், மேலும் நான்கு, நீதிபதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், கொலீஜியம் கூட்டம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நீதி நிர்வாகத்தின் செயல்திறன் மற்றும் தரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தடுக்கும் நோக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்படும் நீதிபதி, காலியிடம் ஏற்படும் இரண்டு மாதங்களுக்கு முன்பே, அந்த நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.

வாய்ப்பு

இதன் மூலம், அந்த நீதிமன்றத்தின் நிர்வாக நடைமுறைகளை புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதிபதியால் முன்பே அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். இதுதவிர, தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வுபெறும்போது அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியான லிசா கில்லை, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும், காலியிடம் ஏற்படும் தேதியில் இருந்து அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Image 1541975

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மார்ச் 5ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அப்பதவிக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரைத்து உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link