லா பாஸ்: பொலிவியா நாட்டு விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இங்கு மத்திய வங்கியிலிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் தலைநகர் லா பாஸ்க்கு அருகே எல் ஆல்டோ நகரில் சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 30 பேர் காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
