முன்பேர வர்த்தகத்துக்கு தகுதி வரம்பு வேண்டும்

பங்குச் சந்தையில் எப் அண்டு ஓ., எனப்படும் முன்பேர வர்த்தகத்துக்கு, குறைந்தபட்ச தகுதி வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனம் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குமார் சவுஹான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:

முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களில் 90 சதவீதம் பேர் நஷ்டத்தையே சந்திப்பதாக செபியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வளர்ந்து வரும் எந்த ஒரு நாடும், தனது மக்களின் பணம், ஆற்றல் மற்றும் வளங்களை ஊக வணிகத்தில் வீணாக்குவதை அனுமதிக்காது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வகுக்கப்பட்டுள்ளதை போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் இந்தியாவுக்கும் தேவை. முன்பேர வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறையாத வரை, மத்திய அரசு மற்றும் செபி தரப்பில் இருந்தும் கூடுதல் வரிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link