வெ ளிநாட்டு முதலீட்டாளர்கள், பிப்., மாதத்தில் இதுவரை 2.1 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 19,091.10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம்.
“சமீபத்தில் இந்தியா- – அமெரிக்க நாடுகளிடையே போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை போக்கியுள்ளது. இது இந்திய சந்தைக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது. மேலும், இந்திய பொருளாதாரம் 2026-27ம் நிதியாண்டில் 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய நிறுவனங்களின் லாபம் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2025ல் மற்ற ஆசிய நாடுகளின் சந்தைகள் 25 சதவீதம் உயர்ந்தபோது, இந்திய சந்தை வெறும் 8.1 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. இதனால், இந்திய பங்குகள் அவற்றின் 5 ஆண்டுகால சராசரி விலையை விட 4 சதவீதம் மலிவாக கிடைக்கின்றன. இந்த ‘டிஸ்கவுன்ட்’ விலையால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்,” என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
