நமது நிருபர்சிங்கப்பூர், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்ற உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 1.5 லட்சம் கோடி

நமது நிருபர்

சிங்கப்பூர், ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்ற உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெற்றார்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றார். உ.பி.,யில் முதலீடு செய்வது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் அவர் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, உ.பி., அரசு 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டுத் திட்டங்களையும் பெற்றது.

இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயணத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவரங்களை சமூக வலைதளத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source link