சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜனவரி 26) தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 27) சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
27-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,200
26-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,18,880
